TRB PG TAMIL NEWS UPDATE: மேல்முறையீட்டு விசாரணை முதுகலைப் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர்,டிஆர்பிசெயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர். தனி நீதிபதியின் தீர்ப்புக்கு நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ்வழக்கு சென்றவாரம் 21.11.2013 அன்று தலைமை நிதிபதி நீதி அரசர் ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. TRB சார்பில் அட்வகேட் ஜெனரல் இன்று அஜராக இயலாததால் வழக்கினை ஒத்திவைக்க கோரியதன் பேரில் வழக்கின் அடுத்த விசாரணையை 28.11.2013 க்...
Posts
Showing posts from November 23, 2013
- Get link
- X
- Other Apps
பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்.ஆசிரியர் தகுதித் தேர்வு,சான்றிதழ்விநியோகம் ஆசிரியர் தகுதித் தேர்வு,மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட10விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தேர்வு எழுதியவரின் பெயர்,பிறந்த தேதி,பதிவு எண்,தேர்ச்சி பெற்ற தாள்,விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் தகுதித் தேர்வு,மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற18,600பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற18,600பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிர...
- Get link
- X
- Other Apps
ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம் இனிமேல் ஆரம்ப பள்ளிகளில், ஒரேஆசிரியரே, பல பாடங்களை எடுக்க வேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு தனி ஆசிரியரை நியமிக்கும் திட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில்தான் இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தற்போதைய நிலையில், மாநிலத்தில் 25% பள்ளிகளில், ஒவ்வொரு பாடத்திற்கும் தனி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் பிற பள்ளிகளில், ஒரே ஆசிரியர் பலபாடங்களை நடத்தும் நிலைமைதான் உள்ளது. ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் திட்டம், மாநில வாரியத்தில் சேராத அனைத்துப் பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தில் கவனம் செலுத்தி அதை நடத்துவதன் மூலம், அவருக்கு பணிச்சுமை குறைவதோடு, பாடத்தையும் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.