Posts

Showing posts from November 16, 2013
தகுதித் தேர்வில் தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட 499 ஆசிரியர்கள் டிஸ்மிஸ் - பள்ளி கல்வித்துறை நடவடிக்கை அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடந்த 15.11.2011-க்கு பிறகு தகுதித் தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப் பட்ட 499 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 23.8.2010 முதல் 14.11.2011-க்கு இடைப்பட்ட காலத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.  மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் நாடு முழுவதும் கடந்த 23.8.2010 முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, அரசு பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ, தனியார் சுயநிதி பள்ளியிலோ ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தும் பொறுப்பு குறிப்பிட்ட தேர்வு அமைப்புகளிடம் வழங்கப்பட் டுள்ளன. மத்திய பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. தமிழ்நாட்டில்...
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் 60% மதிப்பெண் பெற வேண்டும் தகுதி தேர்வு நிபந்தனையை ரத்து செய்ய வழக்கு. அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள்,தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்யக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  நெல்லை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சி.எம்.எஸ்.மான்கோமரி தொடக்கப்பள்ளி தாளாளர் கிப்சன் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:சிறுபான்மை பள்ளியான இந்த பள்ளி நெல்லை சிஎஸ்ஐ டயோசிசன் கீழ் இயங்கி வருகிறது.கடந்த தேசிய ஆசிரியர் கல்விகவுன்சில் வெளியிட்ட அறிவிக்கை அடிப்படையில்,ஆசிரியர் பணி நியமனத்திற்குஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுத்துவிட்டது.ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து தரப்பினரும் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் ஆசிரியர் பணி பெற முடியும் என்ற நிலை உள்ளது.  தகுதி தேர்வு தொடர்பாக தே...