Posts

Showing posts from November 14, 2013
அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: டி.சபிதா-Dinamani  அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.   சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா மற்றும் சிறந்த நூலகர்களுக்கான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.  இந்த விழாவில் அவர் பேசியது: தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளது. மேலும் 1,821 இடைநிலை ஆசிரியர்கள், 11,922 பட்டதாரி ஆசிரியர்கள், 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அ ரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது
இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை 25.11.2013 தேதிக்கு ஒத்திவைப்பு இன்று (14.11.2013) காலை விசாரணைக்கு வந்த வழக்கு இரட்டைப்பட்ட தரப்பின் வாதத்தோடு தொடங்கி மதியம் வரை நீடித்து முடிந்து, மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பின் நிலை கேட்கப்பட்டது. அரசு தரப்பின் வாதங்கள் கேட்ட நீதிபதிகள், சில கேள்விகளுக்கான விளக்கங்கள் கோரி வழக்கை 25.11.2013 அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  25.11.13 அன்று அரசு தரப்பின் வாதத்தோடு , மூன்று வருட தரப்பின் வாதம் நடைபெறும் என்றும் அன்று வழக்கு விசாரணை நடைப்பெற்றால், விசாரணை அன்றே நிறைவுற அதிக வாய்ப்புள்ளதாக வழக்கில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவித்தனர்.