இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (13.11.2013) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் பிற்பகல் 2.45 மணி அளவில் விசாரணைக்கு வந்தது. வரிசை எண் 23-ல் வழக்கு விசாரணை இருந்தாதால் மதியத்துக்குள் விசராணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.அனால் பிற்பகலே விசராணைக்கு வந்தது. ஒரு வருட வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் தன்னுடைய வாதங்களை எடுத்துரைத்தார். மேலும் தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்தில் பதவி ஏற்க உள்ளதால் அவர்களுக்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற இருந்ததால் நீதி மன்றம் விரைவாக முடிக்கப்பட்டது. எனவே இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (14.11.2013 ) விசாரணைக்கு வருகிறது
Posts
Showing posts from November 13, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி ஏன்? -The Hindu கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் சேலம் மாவட்டம் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியில் மாநில அளவில் முதலிடத்தைப்பிடித்துள்ளது. அங்கு,தேர்வெழுதிய34,180பேரில் 1,753பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தகுதித்தேர்வு தேர்ச்சியில் நீலகிரி மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி,ஒன்றாம் வகுப்பு முதல்8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேருவதற்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் தமிழ்நாடு உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (காஷ்மீர் தவிர) கடந்த23.8.2010முதல் அமலுக்கு வந்துவிட்டது. அரசு பள்ளியோ,அரசு உதவி பெறும் பள்ளியோ,சுயநிதி பள்ளியோ அனைத்து பள்ளிகளுக்கும் தகுதித்தேர்வு விதிமுறை பொருந்தும். அரசு பள்ளிகளிலும் உதவி பெறும் பள்ளிகளிலும் இடைநிலை ஆசிரியர்,பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் கண்டிப்பாக தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரு
- Get link
- X
- Other Apps
கோர்ட் அவமதிப்பு வழக்கு பள்ளிக்கல்வி செயலர் ஆஜர் மதுரை: ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்குவதை தாமதப்படுத்துவதாக, தாக்கலான அவமதிப்பு வழக்கில், பள்ளிக்கல்வி செயலர் சபீதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார். புதுக்கோட்டை ரங்கராஜன் தாக்கல் செய்த மனு: இடைநிலை ஆசிரியராக, 1986ல், பணியில் சேர்ந்தேன். பி.எட்., முடித்ததால், 2000ல், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, அரசு, பதவி உயர்வு வழங்கியது. தேர்வுநிலை ஆசிரியர்கள், கீழ்நிலை பணியில் இருந்தால், அவர்களுக்கு, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2009ல், 65 பேருக்கு சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கி, அரசு உத்தரவிட்டது. அப்பட்டியலில், என் பெயர் இல்லை. எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். மனுவை, பள்ளிக்கல்வி செயலர் பரிசீலித்து, எட்டு வாரங்களுக்குள், உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, 2011ல், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பள்ளிக்கல்வி செயலர் சபீதா, நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி, நாக