Posts

Showing posts from November 12, 2013
முதுகலை ஆசிரியர் தேர்வு சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மேலும் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது .  வழக்கின் விவரம் மதுரை அமேரிக்கன் கல்லூரியில் முதுகலை மைக்ரோ பயாலாஜி பயின்ற மனுதாரர் ஒருவர் தனது படிப்பு முதுகலை தாவரவியல் பட்டத்துக்கு இணையானது இல்லை என்று கூறி சான்றிதல் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மனுதாக்கல் செய்திருந்தார்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தாழை முத்தரசன் ஆஜராகி வாதிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி அம் மனுவுக்கு பதில் தாக்கல் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு வழக்குவிசாரணையை ஒத்திவைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு மேல்முறையீட்டு மனு விசாரணை மீண்டும்அடுத்தவாரம் ?   முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வு குறித்த அரசின் மேல்முறையீட்டு மனு இன்று(12.11.2013) விசாரணைக்கு வரவில்லை.அம் மனு மீண்டும்அடுத்தவாரம் 19.11.13 அன்று விசாரணைக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெர்விக்கின்றன எனினும் அடுத்தவாரம் திங்கள் அன்றுதான் (18.11.2013 ) விசாரணை தேதி உறுதியாக தெரியவரும்
தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளதாக வழக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு நோட்டீசு.   காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ்(வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தவறான விடை நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன்.  ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன். இந்த தேர்வு முடிவினை 5–11–2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அதில், நான் 89 மதிப்பெண் பெற்று இருந்தேன். ஆனால், தேர்வில் தேர்ச்சிபெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். அதேநேரம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதில், கேள்வி எண் 4, 14, 24 ஆகிய கேள்விகளுக்குதவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது. 3 மதிப்பெண்கள் நான், இந்த3 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துள்ளேன். இதையடுத்து, 6–11–2013 அன்று இந்த 3 கேள்விக்குரிய சரியான விடைகளையும்,அதற்கான ஆதார புத்தகங்களையும் இணைத்து ஆசிரியர் த
முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு இன்று (12.11.13) விசாரணைக்கு வரவில்லை.    முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பிசெயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர். தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்து வழக்கினை ஒத்திவைத்தது  அவ் வழக்கு இன்று ( நவம்பர் 12 ந் தேதி) வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது.  வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை
குரூப்-2 விண்ணப்ப ஒப்புகை வெளியீடு  சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்விற்கான, ஒப்புகை பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வரும் 12.12.2013ம் தேதியன்று, குரூப் 2 பணிக்கான தேர்வை நடத்தவுள்ளது. 1,064 காலியிடங்களுக்கான இந்த தேர்விற்கு, 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களின் விவரங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான, www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து, தங்களது விண்ணப்பம் தேர்வாணையத்தி"ன் இணையதளத்தில் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம் என, தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார்.
குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும்  டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த (டிசம்பர்) மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.   நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப நடத்தியது. இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும். 30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும்.  இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள். தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது. அடுத்த மாதம் முடிவு வெளியிடப்படும்  இந்