வருவாய்த் துறையில் 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு. வருவாய்த் துறையில் காலியாகவுள்ள , 1,400 வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக, காலியிடங்களின் பட்டியல் டி.என்.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி அரசு நிர்வாகத்தின் அடிமட்ட அளவில் மிக முக்கியப் பங்கு வகிப்பவர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் (வி.ஏ.ஓ.). சாதிச் சான்று, இருப்பிடச்சான்று, வருமானச் சான்று எனப் பல்வேறு விதமான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், பட்டா பட்டா பெயர் மாற்றத்துக்கும்,அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கும் வி.ஏ.ஓ.வின் அத்தாட்சி சான்று அவசியம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக 1,870 வி.ஏ.ஓ. பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வி.ஏ.ஓ. பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாகவும்,ஒரே வி.ஏ.ஓ. கூடுதலாக இரண்டு மூன்று கிராமங்களின் பணிகளையும் சேர்த்துக் கவனிக்க வேண்டியுள்ளது என்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ந்துபுகார் தெரிவித்து வருகின்றனர். 1,400 காலியிடங்கள் ...
Posts
Showing posts from November 11, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி கோரிக்கை. ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மகளிரணி கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் மதனா, மாவட்டத் துணைத்தலைவர் ஆனந்தராசு, பொருளாளர் அருண் ராபின்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆங்கில வழிக் கல்வி திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆசிர்யர் பணிக்கான தகுதித்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் ஊதியத்தை மத்திய அரசுக்கு இணையாக உயர்த்த வேண்டும் ஆகியவை உள்பட, 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும், 24ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் பட்டினி போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- Get link
- X
- Other Apps
டி.ஆர்.பி தேர்வு முறையில் ஒரு வெளிப்படைதன்மை இருக்கவேண்டும் என்று கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வெற்றி பெறாதவர்களையும் வெற்றி பெற வைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும்ஊழல் கும்பல்ஒன்று முழு முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17, 18ம் தேதியில் டி.ஆர்.பி. மூன்றாவது முறையாக டி.இ.டி. தேர்வை நடத்தியது. இதில் முதல் தாள் தேர்வை 2.62 லட்சம் பேரும், இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் தயாராக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 27 ஆயிரத்து92 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 4.09 சதவீதம் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட 1.1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேர...