டி.இ.டி., தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படையெடுப்பு; குறைகளை கேட்க தனி மையம் அமைப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் ( டி.இ.டி.,), சரியான மதிப்பெண் கிடைக்காமல், பாதிக்கப்பட்ட தேர்வர்கள், தினமும், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) அலுவலகத்திற்கு படை எடுக்கின்றனர். இவர்களின் குறைகளை கேட்டு, உரிய பதில் அளிப்பதற்காக, குறை கேட்பு மையத்தை, டி.ஆர்.பி., அமைத்துள்ளது. சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகத்திற்குள் சென்று, அதிகாரிகளை சந்திப்பது என்பது, சாமானிய காரியம் அல்ல. பாதுகாப்பு நிறைந்த பகுதி என, கூறி, பார்வையாளர்களை, நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி விடுவர். தேர்வில், குளறுபடிகள் நடந்தால், தேர்வர், டி.ஆர்.பி.,க்கு படை எடுத்துவிடுவர். அவர்களை சமாளிக்கும் வகையில், அலுவலக வாயிலில், பணியாளர் ஒருவரை நியமித்து, தேர்வர்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில், தற்போது, டி.இ.டி., தேர்வில் எழுந்துள்ள பிரச்னைகள் காரணமாக, தேர்வர்கள் ஏராளமானோர், தினமும், டி.ஆர்.பி.,க்கு சென்றபடி உள்ளனர். தற்காலிக விடைகளை வெளியிட்டபோதே, தவறான விடைகளை ஆட்சேபித்து, ஏராளமான ...
Posts
Showing posts from November 10, 2013
- Get link
- X
- Other Apps
முதுகலை தமிழாசிரியர் தேர்வு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை மேலும் தள்ளிப்போகும்? முதுகலை தமிழாசிரியர் தேர்வு தடை குறித்த அரசின் மேல் முறையீடு குறித்த வழக்கில் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு சென்ற வாரம் நீதியரசர்கள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால தடைவிதித்து வழக்கினை ஒத்திவைத்தது அவ் வழக்கு .வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வரவிருந்தது. வழக்கின் அடுத்த கட்ட நிலையை அறிந்துகொள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்வெழுதிய அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில்,அடுத்தவாரம் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் அடங்கிய அமர்வுக்கு விடுமுறை எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன,.எனவே வழக்கின் விசாரனை மேலும் தள்ளிப்போகக்கூடும் என்றும் அதன் முடிவு தெரிவதற்கு மேலும் தாமதம் ஆகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதுகுறித்து முழுவிவரம் நவம்பர் 12 அன்று தெரியக்கூடும்..
- Get link
- X
- Other Apps
குரூப் 4 தேர்வு நடந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இன்னும், தேர்வு முடிவை வெளியிடாமல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி., ) மவுனம் காத்து வருகிறது. இதனால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். தமிழக அரசின் பல்வேறு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில், காலியாக உள்ள, 5,566 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 25ல், குரூப் 4, போட்டித்தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடந்த தேர்வு என்பதால், போட்டி போட்டு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, 17 லட்சமாக உயர்ந்தது. எனினும், ஒரே தேர்வர், பல முறை விண்ணப்பித்தது, விண்ணப்பங்களை தவறாக பூர்த்தி செய்தது போன்ற காரணங்களால், மூன்று லட்சம் விண்ணப்பங்களை, டி.என்.பி.எஸ்.சி., நிராகரித்தது. இறுதியில், 14 லட்சம் பேர், தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தேர்வு நாளன்று, இரண்டு லட்சம் பேர், வரவில்லை. இதனால், 12.21 லட்சம் பேர், தேர்வு எழுதினர். தேர்வு நடந்து, நான்கு மாதம் முடியப் போகிறது. தேர்வு முடிவை, ஒரு மாதமாக, தேர்வர், ஆவலுடன் எதிர்பார்த்து க...