Posts

Showing posts from November 8, 2013
டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்  முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது. டி.இ.டி., தேர்வின், உத்தேச விடைகளை டி.ஆர்.பி., வெளியிட்டபோது, குளறுபடியான கேள்விகள், விடைகள் குறித்து, தேர்வர்கள் அளித்த விண்ணப்பங்களின் மீது, டி.ஆர்.பி., சரியான முடிவை எடுக்கவில்லை என, தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சரியான விடைகளுக்கு, மதிப்பெண் அளிக்காததால், ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண் வித்தியாசத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் பலரும் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளனர்.   ஆறரை லட்சம் பேர் எழுதிய, டி.இ.டி., தேர்வின் முடிவை, 5ம் தேதி இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. தேர்வு முடிவுடன், தேர்வுகளுக்கான இறுதி விடைகளையும் வெளியிட்டது. உத்தேச விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டபோது, விடை குளறுபடிகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, 2,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள், டி.ஆர்.பி.,யிடம், மனு அளித்தனர். இந்த மனுக்களை, பாடவாரியான நிபுணர்கள் குழுவிடம் ஆய்வு ...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண்கள்  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு உரிய மதிப் பெண்ணை ஐகோர்ட் கிளை நேரடியாக வழங்கியது.  மதுரைகருப்பாயூரணியை சேர்ந்த ராமச்சந்திரன்,ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் எம்.காம்,எம்.பில்,பிஎட் முடித்துள்ளேன். தமிழகத்தில் கடந்த ஜூலை 21ல் நடந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) பணித்தேர்வில் கலந்துகொண்டேன்.   இந்த தேர்வு முடிவின் தற்காலிக விடை சுருக்கத்திலும்,இறுதி விடை சுருக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருந்த பதில்கள் வேறுவேறாக இருந்தன. நான் ஐந்து கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்திருந்தேன். அதற்கு மதிப்பெண் வழங்கவில்லை. நான் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவன் என்பதால் கட்,ஆப் மதிப்பெண் 107 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  ஆனால் நான் 103 மதிப்பெண் பெற்றேன்.  எனவே,தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கி,என்னை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இவரைப்போன்று மேலும் ...
ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்-Dinamani  ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் செய்யும் முறை இந்த ஆண்டு மாறலாம் எனத் தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மாநிலப் பதிவு மூப்புக்குப் பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யலாமா என அரசு பரிசீலித்து வருகிறது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீ...