Posts

Showing posts from November 6, 2013
தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வாரத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்படும்ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு வெளியாகி உள்ளன.முதல் தாள் தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில்12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். இதில் 14,496 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தாள்களையும் எழுதிய 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேரில் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அரசு துவக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்ற தேவைப்படும் ஆசிரியர்கள் 15,000 மட்டுமே. ஆனால் 27 ஆயிரம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளுக்கும்,இடைநிலை ஆசிரியர் பயிற்சி வேலை வாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையிலும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.  எனவே,தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களில் தற்போது 15 ஆயிரம் பேர் மட்டும்தான் ஆசிரியர் பணிக்கு எடுத்து கொள்ளப்படுகிறார்கள். இவர்களுக்கான சான்ற...
அதிர்ச்சி அளிக்கும் தேர்வு முடிவு - தமிழ் முரசு தமிழகத்தில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பதை ஒரு சாம்பிள் போல் நேற்று வெளியான தகுதித் தேர்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்று கடந்த 2010ம் ஆண்டில் அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து, அதே ஆண்டில் முதல் முறையாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஏராளமான ஆசிரியர்கள் தேர்வை எழுதினாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்ச்சி விகிதம் இருந்தது. இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு(தாள் 1) தனியாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு(தாள் 2) தனியாகவும் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. முதல்தாள் தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதி 687 மையங்களில நடந்தது. தாள் 2க்கான தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி 1070 மையங்களில் நடந்தது.  இரண்டு தேர்வுக்கான கீ-ஆன்சர் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியிடப்பட்டது. பின்னர், கேள்வித்தாள் மற்றும் விடைகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படி வாரியம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தமிழகத்தில் இடைநிலை ஆசிர...
13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு ?  நேற்று வெளியிடப்பட்டதகுதித்தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணிநடந்து ஏற்கனவே முடிந்துள்ளது.  13ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கடந்தஆகஸ்ட்17, 18ஆகியதேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தகுதித்தேர்வை ஆறரைலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். தேர்வுமுடிவு நேற்று வெளியிடப்பட்டது இந்த தகுதித்தேர்வு மூலம் 13ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.  இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் மட்டும்10ஆயிரம்அடங்கும். மீதமுள்ள 3ஆயிரம் இடங்கள் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆகும். பாட வாரியாக கணக்கெடுப்பு பட்டதாரிஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை,தொடக்கக் கல்வித்துறை,ஆதிதிராவிடர் நலத்துறை,நகராட்சி பள்ளிகள், சென...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஆறரை லட்சம் பேர் எழுதிய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.  6.62 லட்சம் பேர் எழுதினர் இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் தாள் தேர்வை இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர் எழுதினர். இரண்டாம் தாள் தேர்வை 4 லட்சத்து 311 பேர் எழுதினர். அந்த வகையில் தமிழகத்தில் இரண்டு தாள்களையும் 6 லட்சத்து 62 ஆயிரத்து 498 பேர் எழுதினர்.  முதல் தாள் தேர்ச்சி விவரங்கள்  முதல் தாள் எழுதிய இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் ஆண்கள் 63 ஆயிரத்து 717 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 470 பேர். இவர்களில் 12 ஆயிரத்து 596 பேர், 60 சதவீதம் மார்க்குக்கு மேல் (தேர்ச்சிக்கான மதிப்பெண்) பெற்றுள்ளனர்.முதல் தாள் தேர்வு எழுதியவர்களில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களி...