ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை, ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள்.இந்த நிலையில், இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டது. முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in இதில் பார்க்கலாம். இந்தத் தேர்வில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
Posts
Showing posts from November 5, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் 4.09%ஆக உள்ளது:ஆசிரியர் தேர்வு வாரியம். ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவைக் காணலாம்.TET தேர்வில் இரண்டாம் தாளுக்கான முடிவு நள்ளிரவுக்குள் வெளியாகும் என அறிவிப்பு.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் 4.09%ஆக உள்ளது:ஆசிரியர் தேர்வு வாரியம்.
- Get link
- X
- Other Apps
PG TRB கூடுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 213 பேருக்கு இன்றும் நாளையும்(5,6 -11-2013) சான்றிதழ் சரிபார்ப்பு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான நீதிமன்ற உத்தரவுப்படி வெளியிடப்பட்டுள்ள கூடுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள 213 பேருக்கும், கடந்த மாதம் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள இயாலாமல் போனவர்கள் மற்றும் உரிய சான்றிதழ்களை அன்று சமர்ப்பிக்க இயாலாதவர்களுக்கும் சென்னையில் இன்றும் நாளையும்(5,6 -.1-.2013) சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகின்றது. அதன் பின்னர் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியல் நீதிமன்ற உத்தரவுக்கினங்க தயாரிக்கப்படும் எனத் தெரிகின்றது. 1:1 க்கும் கூடுதலாக 213 பேர் அழைக்கப்பட்டுள்ளதால் தரவரிசையில் கடைசியில் இடம்பெறும் சிலருக்கு பணிவாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
- Get link
- X
- Other Apps
முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் தேர்வர்கள் வழக்கின் சிறப்புத் தொகுப்பு. முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர். ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர்.ஏ,பி,சி,டிஎன நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத்தாளில் பிவரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர்.நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே,கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும்.இருப்பினும், பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளன.அதுவும் ங் என்ற எழுத் துது எனவும், ழ் என்பது துணைக்காலாகவும் அச்ச...
- Get link
- X
- Other Apps
கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புதிய உத்தரவு அரசுத் துறைகளில் கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வரன்முறைப்படுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களின் எண்ணிக்கையை குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து கருணை அடிப்படையிலான பணி நியமன நடைமுறைகள் எளிமையாகின்றன. மேலும், வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட தாற்காலிக வேலைகளை நிரந்தரமாக்கும் பணிகள் இனி விரைந்து மேற்கொள்ளப்படும். வாரிசுகளுக்குத் தரப்பட்ட தாற்காலிகப் பணியை வரன்முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது. இதற்காக, அரசு ஊழியர்களின் வாரிசுகளிடம் இருந்து 15 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டன. வாரிசுகள் தற்போது பணிபுரியும் துறையின் உயர் அதிகாரியிடம் இந்தச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும். இத்துடன், 18 வகையான பிரிவுகள் அடங்கிய ஒரு படிவத்தையும் சேர்த்துப் பெற்று அரசு பரிசீலனைக்கு அந்த அதிகாரி அனுப்பிவைப்பார். இவ்வாறு பலவகையான சான்றிதழ்களைத் திரட்டித் தரவேண்டியுள்ளதால் வாரிசுகளின் பணி நிரந்தரம் காலதாமதமாகிறது. இதைத் தவிர்க்கும்வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு பிறப்பித்துள்...