Posts

Showing posts from November 4, 2013
மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல். நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356 பள்ளிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்புமற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய மாதிரி பள்ளிகளை தொடங்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகள் அனைத்தும் தனியாருக்கு சாதகமாகவே உள்ளன. மாதிரி பள்ளிகளை அமைப்பதற்கு தேவையான 3 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடமிருந்து மானிய விலையில் வாங்குவதோ அல்லது குத்தகைக்கு எடுப்பதோ மட்டும்தான் தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டியதாகும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தொடங்கி,பராமரிப்பு வரை செலவில் பெரும்பகுதியை மத்திய அரசே வழங்குகிறது. அதேநேரத்தில்,6 முதல் 12 ஆம் வகுப்பு வரை கொண்ட இப்பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் வகுப்புக்கு 140...