Posts

Showing posts from October 29, 2013
1093 உதவி பேராசிரியர் தேர்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்டு உத்தரவு  சென்னை ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.கோவிந்தன், சி.மணி, ஜி.அன்பழகன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 28–5–2013 அன்று விளம்பரம் வெளியிடப்பட்டது.  இதில், உதவி பேராசிரியர் பதவிக்கு பல்கலைக்கழகம் மானிய குழு நிர்ணயம் செய்துள்ள தகுதி மதிப்பெண்களுக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்துள்ளது. எனவே, உதவி பேராசிரியர் பதவிக்கு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புக்கும், அதன் அடிப்படையில் தேர்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.   இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெ.லட்சுமிநாராயணன் ஆஜராகி வாதம் செய்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘கல்லூரி உதவி பேராசிரியர் பதவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நிர்ணயம
தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்பணிக்கு மறு தேர்வு-தனி நீதிபதியின் தீர்ப்புக்கு 2 வாரகால இடைக்கால தடை.  தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வு பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் கிளையில் மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி ,ஆண்டனி கிளாரா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்து, தமிழ்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வு முடிவை வெளியிட நீதிபதி தடை விதித்தார். மேலும்,மறு தேர்வு நடத்துவது தொடர்பாகஅரசு ஆலோசனை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.  இந்நிலையில்,மதுரையை சேர்ந்த மகாராஜன், அன்புதவமணி, சிவகங்கை ராம்நகரை சேர்ந்த பாலமுருகன், ராமநாதபுரம் சிக்கலை சேர்ந்த சாந்தகுமார் ஆகியோர் இந்த வழக்கில் தங்களையும்எதிர்மனுதாரர்களாக சேர்க்கவும், தேர்வு முடிவு வெளியிட விதிக்கப்பட்டதடையை விலக்கக் கோரியும் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இவ் வழக்கின்விசாரணைக்கு டிஆர்பி தலைவர் விபுநய்யர், உறுப்பினர்கள் அறிவொளி,தங்கமாரி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
முதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை. முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வை மீண்டும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தனர் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், வைத்தியநாதன்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் TRB அறிக்கை தாக்கல். 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிரமீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டன.   தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரிபோட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .  இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட மூவர் தாக்கல்செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில்தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்தபட்டியலை ஆசிரியர் தேர்வு
ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை':கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு தொடர்பாக, சட்டசபையில், நேற்று விவாதம் நடந்தது.  அதன் விவரம்: இ.கம்யூ., குணசேகரன்: டி.என்.பி.சி., குரூப் - 1, தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கான மதிப்பெண்ணை, இட ஒதுக்கீடு அடிப்படையில், மாற்றி அமைக்க வேண்டும்.  அமைச்சர் பழனியப்பன்: மத்திய அரசு, கட்டாய கல்வி சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, ஆசிரியர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என, சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வில், ஒருவர் குறைந்தது, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது விதி. அதன் அடிப்படையில், தமிழகத்தில், 150 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண்களை, மாநில அரசு விரும்பினால் குறைக்கலாம். ஆனால், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களை, ஆசிரியர்களாக தேர்வு செய்தால், குழந
கோர்ட் அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆஜராக உத்தரவு  கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக மாநில உயர்கல்வி செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.   திண்டுக்கல் மாவட்டம்,பழநி பழைய ஆயக்குடிஉச்சமன்புதூரை சேர்ந்த வினோத் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஏ (இங்கிலிஷ் வித் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்) படித்துள்ளேன். 2012ல் பிஎட் முடித்தேன். கடந்த 2012,அக். 14ல் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று,சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். ஆனால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பிஏ ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிக்கேசன் படிப்பு,பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது இல்லை என்பதால் பணி வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இப்படிப்பு பிஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை கவனத்தில் எடுக்காமல் என்னை ஆசிரியர் பணிக்கு நிராகரித்துள்ளனர். இதை எதிர்த்து ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்«ன். வழக்கை விசாரித்த நீதிபதி,மனுதாரரின் படிப்பு குறித்து
டி.இ.டி., தேர்வு முடிவு இந்த வாரத்தில் வெளியீடு .  சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், இந்த வார இறுதிக்குள், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகிறது. ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த ஆகஸ்டில், டி.இ.டி., தேர்வு நடந்தது;6.5 லட்சம் பேர், எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, முடிவுகள் தயாராக உள்ளன.   தற்போது,சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருவதால், முடிவு வெளியாவது தள்ளிப்போவதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளையுடன், சட்டசபை கூட்டத்தொடர் முடிகிறது. அதன்பின், டி.இ.டி., தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.