நீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )மாலை தெரியவரும். 2 ஆயிரத்து 881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களுக்கானதேர்வு முடிவுகள் அக்டோபர் 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தமிழ் தவிர மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற. 2,276,பேருக்குஆசிரியர் தேர்வு வாரியத்தால் அக்.22, 23 ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை. வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜோதி ஆபிகாரம் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தேர்வு எழுதியவர்களில் தகுதியானவர்கள், விடுபட்டவர்கள் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல்...
Posts
Showing posts from October 28, 2013
- Get link
- X
- Other Apps
குரூப் 1 பிரதான தேர்வு: 3 மாதத்தில் முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் மூன்று மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையத் தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 25 பதவிகளுக்கான குரூப் 1 பிரதான தேர்வு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. சென்னையில் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த இந்தத் தேர்விவை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை. குரூப் 1 தேர்வு முடிவுகள் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் கூறியது: டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எந்தவிதத் தவறுக்கும் இடம் தராமல் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. மிகவும் வெளிப்படைத்தன்மையோடு குரூப் 1 பணிகளுக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிரதான தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும். அதன்பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சியானவர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றார் அவர்.