தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது-Dinamani சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான பதில் எழுதினேன். இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும் எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்
Posts
Showing posts from October 27, 2013
- Get link
- X
- Other Apps
தகுதி தேர்வில் தவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தடை; ஐகோர்ட்டு உத்தரவு சென்னை, தாவரவியல் ஆசிரியர் தகுதி தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் அளித்ததால், 193 பணியிடங்களில் ஒரு இடத்தை மட்டும் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் பி.தேன்மொழி (வயது 34). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தகுதி தேர்வு நான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள். எம்.எஸ்சி. (தாவரவியல்), பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம், 193 முதுநிலை தாவரவியல் உதவி பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கடந்த 21–7–2013 அன்று நடத்திய எழுத்து தேர்வில் கலந்துகொண்டு தேர்வு எழுதினேன். இந்த தேர்வு முடிவு 11–10–2013 அன்று வெளியானது. அதில், எனக்கு 93 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த தேர்வில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ‘கட் ஆப்‘ மதிப்பெண் 94 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து என் விடைத்தாளை சரிபார்த்தபோது, நான் அளித்த சரியான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பது