Posts

Showing posts from October 25, 2013
ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!:  காலியாக உள்ள 1440 கணினி ஆசிரியர்(Computer Teacher) பணியிடங்களை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.   1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய 2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 2008, 2010 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே 894, 125 மற்றும் 15 எண்ணிகையிலான ஆசிரியர்கள் மட்டும் 50% மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர்.  அதனைத் தொடர்ந்து 1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிர...
ஆங்கிலம் தவிர்த்து, இதர ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த, தொடக்கக் கல்வித் துறை முன்வர வேண்டும் என,TNGTF பொதுச் செயலர்  கலந்தாய்வும் இல்லை;பதவி உயர்வும் இல்லை-பட்டதாரி ஆசிரியர் புலம்பல்.தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு,ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டுமாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை.  பள்ளிக்கல்வித் துறையில்,தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு,முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வும் நடத்தவில்லை. இதனால்,இரு துறைகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்,புலம்பி வருகின்றனர்.இரு துறைகளிலும்,பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் முடிந்துவிட்டன. ஆனால்,மேற்குறிப்பிட்ட இரு கலந்தாய்வுகள் மட்டும்,இதுவரை நடக்கவில்லை.  இரட்டை பட்டம் பெற்றவர்களுக்கு,பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக,வழக்கு நிலுவையில் இருப்பதால்,கலந்தாய்வு நடத்த முடியவில்லை என,தொடக்கக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால்,ஆங்கில ஆசிரியர் மட்டுமே,இரு பட்டங்களை பெற்றுள்ளனர். எனவே,ஆங்கிலம் தவிர்த்து,இதர ஆசிரியர்களுக்கு,பணியிட மாறுத...
குரூப்–2 தேர்வு முறையில் மாற்றம் ஆற்றலை சோதிக்க கட்டுரைகள் அடங்கிய கேள்விகள் இடம் பெறும்  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 தேர்வில் வினாக்கள் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பட்டதாரிகளின் அறிவுத்திறனையும் ஆற்றலையும் சோதிக்க கட்டுரைகள் எழுதும் வகையில் வினாக்கள் கேட்கப்பட இருக்கிறது. குரூப்–2 தேர்வு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர், உதவியாளர், மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்துவருகிறது.   வழக்கமாக குரூப்–2 தேர்வு இரு வகைப்படும். ஒன்று எழுத்து தேர்வு மட்டும் உண்டு. நேர்முகத்தேர்வு கிடையாது. மற்றொன்று எழுத்துதேர்வும் உண்டு. நேர்முகத்தேர்வும் உண்டு. இந்த குரூப்–2 தேர்வுக்கு முன்பு ஒரே தேர்வுதான் உண்டு. ஆனால் இப்போது குரூப்–1 தேர்வு போல, குரூப்–2 தேர்விலும் முதல்நிலைதேர்வு, மெயின்தேர்வு என்று கொண்டு வரப்பட்டுள்ளது.  நேர்முதத்தேர்வு இல்லாத தேர்வில் மெயின்தேர்வில் அதிக மார்க் எடுத்தால் அ...
Flash News: PG TRB additional cv list realeased more details you see www.trb.tn.nic.in