Posts

Showing posts from October 18, 2013
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார் முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கானஅழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சான்றிதழ். சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் .  இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் 3 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன இவ்வழக்குகள் இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி அதனை வருகின்ற 21 தேதிக்கு ஒத்திவைத்தார்.  அன்றையதினம் மூன்று வழக்குகளும் நீதியரசர் நாகமுத்து அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக் 21 மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளை யில் வழக்கு.    முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு,வரும், 22, 23ம் தேதிகளில், மாநிலம் முழுவதும், 14இடங்களில் நடக்கின்றன. இதில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு டிஆர்பி விளக்கக் குறிப்பேட்டில் குறிப்பிட்டவாறு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டின் கீழ் இறுதி கட் -ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அழைக்கப்படவில்லை .வயதில் மூத்தோர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவ் வழக்கு இன்று ( அக் 18) நீதியரசர் டி எஸ் சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று (அக் 18)மாலை வழக்கின் நிலை குறித்து தெரியவரும்.
10,000 பட்டதாரி ஆசிரியர் & 3,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு  சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 10 ஆயிரம் உள்ளன. மீதம் உள்ள 3 ஆயிரம் பணியிடங்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள். இவற்றை நிரப்ப, பாடவாரியான காலியிடங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து, தகுதித் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான 'நெட்' தகுதித் தேர்வில் மீண்டும் மாற்றம்.  கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வில் மாற்றம் செய்ய பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) முடிவு செய்துள்ளது. நெட் தகுதித் தேர்வு பல்கலைக்கழகம், கல்லூரி களில் உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் நெட் அல்லது ஸ்லெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் மட்டும் இந்ததகுதித் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி.யும் மாநில அளவிலான ஸ்லெட் தகுதித் தேர்வை யு.ஜி.சி. அனுமதித்துள்ள ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமும் நடத்துகின்றன. ஆண்டுக்கு 2 முறை ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன், டிசம்பர்) நடத்தப்படும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த கல்லூரியிலும் உதவிப் பேராசிரியர் ஆகலாம்.  அதேநேரத்தில் ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே அந்த தகுதி ஏற்றுக்கொள்ளப்படும்.முன்பெல்லாம் நெட் தகுதித் தேர்வு விரிவாக விடையளிக்கும் வகையில் இ