முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் 22, 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்கள் 2 ஆயிரத்து 881 உள்ளன. இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி எழுத்துத்தேர்வை நடத்தியது. அந்த தேர்வில் தமிழ்பாடத்திற்கான தேர்வு வினாத்தாளில் ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்தன. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் தமிழ்பாடத்திற்கான தேர்வை மீண்டும் நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 7–ந்தேதி இரவு வெளியிட்டது. சான்றிதழ் சரிபார்த்தல் இப்போது சான்றிதழ் சரிபார்த்தலுக்கு இணையதளம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்களின் பெயர்கள் இணையதளத்தில் உள்ளன. சான்றிதழ்...
Posts
Showing posts from October 15, 2013
- Get link
- X
- Other Apps
டிஇடி தேர்வு: உருளையும், கோளமும் ஒன்றா? முழு மதிப்பெண்வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் (தாள்2), தவறாக இடம்பெற்றிருந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சேர்ந்த விஜயலெட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அக் கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஜூலை 12 இல் நடத்தியஆசிரியர் தகுதித் தேர்வில், தாள் 2 தேர்வை எழுதிய விஜயலெட்சுமி 89 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இத் தேர்வில் அவர் எழுதிய பி வரிசை கேள்வித் தாளில், 115 ஆவது கேள்வி தவறாக இடம்பெற்றிருப்பதால், அதற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து அளித்த தீர்ப்பு: இந்த கேள்வித் தாளில் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள 115 ஆவது கேள்வியில் உள்ளீடற்ற கோளம் (ஹாலோ ஸ்பியர்) என்றும்,அதே கேள்வி தமிழில் உள்ளீடற்ற உருளை (ஹாலோ சிலிண்டர்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோளம் - உருளை இரண்டும்...
- Get link
- X
- Other Apps
நட15,000 பணியிடம் நிரப்ப திட்டம் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம்வடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம்17மற்றும்18ம் தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950பேர் எழுதினர். இதுபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4லட்சத்து11ஆயிரத்து 600பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு1060மையங்களில் நடந்தது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே,இன்னும்10நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான உடன் நேர்காணல் நடத்தி,சான்றிதழ் சரிபார்த்த பின்னர் உடனடியாக ஆசிரியர் பணிக்கான நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதில்,சுமார் 15ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.