ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; அக்.22, 23ல் சான்று சரிபார்ப்பு - Dinamalar ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 22, 23ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 2,881 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு, ஜூலை 21ல் டி.ஆர்.பி., தேர்வு நடத்தியது. இதில், 1.60 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். தமிழ் பாட வினாத்தாளில், ஏற்பட்ட குளறுபடியால் அப்பாட முடிவு வெளியாகவில்லை. ஆங்கிலம், வணிகவியல், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணியை, அக்.22, 23 ஆகிய இரு நாட்கள் நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது; ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம், அக்.,17ல் சென்னையில் நடக்கிறது. அன்றைய தினம், சான்று சரிபார்ப்பிற்கான விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பர். தமிழ் பாட...
Posts
Showing posts from October 13, 2013