முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,? சென்னை: டி.ஆர்.பி.,யில்,ஒவ்வொரு தேர்வு முடிவும்,பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை,இரண்டரை மாதங்களுக்கு மேலாக,வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி.,தேர்வு முடிவும் வெளியாகவில்லை. தேர்வு முடிவு வெளியீட்டிற்குப்பின்,சான்றிதழ் சரிபார்ப்பு,இறுதி பட்டியல் தயாரிப்பு என,பல வேலைகள் உள்ளன. இவை அனைத்தையும் முடித்து,இறுதியாக,தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை,கல்வித்துறையிடம் ஒப்படைப்பதற்குள்,பள்ளி பொதுத்தேர்வே வந்துவிடும் நிலை உள்ளது. பட்டதாரி ஆசிரியர் இல்லாததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்களும்,முதுகலை ஆசிரியர் இல்லாததால்,பிளஸ்2தேர்வை எழுதும் மாணவர்களும்,கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாவர். இதை அறிந்த முதல்வர்,தற்காலிக அடிப்படையில், 2,645முதுகலை ஆசிரியர்களையும், 3,900பட்டதாரி ஆசிரியர்களையும்,உடனடியாக நியமனம் செய்ய,நேற்று முன்தினம் உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவிட்டிருப்பது குறித்த செய்தியை,பள்ளிக்கல்வி இயக்குனர்,ராமேஸ்வர முருகன்,அறிக்கையாக வெளியிட்டார். இந்த அறிக்கை,இரவு, 7:30ம...
Posts
Showing posts from October 9, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு ? ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து, பிழைகளை நீக்குதல், முடிவுகளைசரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன.ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும்அக்டோபர் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. போட்டித் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி,ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வரிசை ...