Posts

Showing posts from October 7, 2013
முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை நிரப்ப கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரிகள் எழுதினர். இந்த நிலையில், தமிழ் பாடம் நீங்கலாக மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவு திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது. தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( trb.tn.nic.in) பார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவோர் விவரம் தனியே தெரிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
முதுகலை,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப முதல்வர் உத்தரவு . அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக 6545இடங்கள்உள்ளன.பொதுத்தேர்வு எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களை தயார் செய்ய நியமனம் உதவும்.தற்காலிக நியமனத்திற்காக ₨20.18கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.
முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இம்முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
TRB PGT RESULT RELEASED | கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
இனி ஆசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனமா..... தற்காலிகமாக 2645முதுநிலை ஆசிரியர்கள் 3900பட்டதாரி ஆசிரியர் கள் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்வர் உத்தரவு. இதற்காக ₹20.18கோடி நிதி ஒதுக்கீடு .-பள்ளிக்கல்வி துறை. #தந்தி டிவி#
இரட்டைப்பட்டம் வழக்கு - வரும் புதன் கிழமை(9.10.2013) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் நண்பகல்12.45க்கு விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கில் இரட்டைப்பட்டம் சார்பாக மூத்த வழக்கறிஞர் முத்து குமாரசாமிஅவர்கள் 45நிமிடம் வாதாடினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பின்னால் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக திரு.பீமன் அவர்கள் தன் வாதத்தை தொடர்ந்தார்கள். அதன் பின் வழக்கு விசாரணை வருகிற புதன் கிழமை(9.10.2013)ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற புதன்கிழமை வழக்கு விசாரணை நிறைவு பெறும் என்றும் தீர்ப்பு ஒரிரு வாரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை ஓரிரு நாளில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.