தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல் திண்டுக்கல்: அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில், பள்ளிகளில் 10 ம் வகுப்பு வரை, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனவும், 2010 ஆக., 23 க்கு பிறகு, நியமனம் பெற்ற ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தியதால், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளின் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், 2016 க்குள் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென, இயக்குனரகமும் உத்தரவிட்டது. இதனால், பல தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஏற்கனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில ஆசிரியர்கள்...
Posts
Showing posts from October 2, 2013
- Get link
- X
- Other Apps
10 நாட்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள்-ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்தப்பட்ட இந்ததேர்வை,சுமார் ஐந்து லட்சம் பேர் எழுதினர். இதற்கான விடைகள் ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி வெளியிடப்பட்டன. அந்த விடைகளுக்கு சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆட்சபனை தெரிவித்ததையடுத்து வல்லுநர் குழு ஆய்விற்கு பிறகு அதில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாற்றங்களுடன் கூடிய புதிய விடைகளும் முடிவுகளும் சேர்த்தே வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Get link
- X
- Other Apps
முதுகலை தமிழ் தேர்வு ரத்து -டி.ஆர்.பி., அவசர ஆலோசனை முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர்நீதிமன்றம்,மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து,டி.ஆர்.பி., அதிகாரிகள்,இன்று (அக் 2) காலை ஆலோசனை நடத்துகின்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர்பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 21ல், போட்டித்தேர்வை நடத்தியது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்வுப் பட்டியலை வெளியிட,டி.ஆர்.பி., தயாரான நிலையில், தமிழ்பாடகேள்வித்தாளில, 47 கேள்விகள், பிழையுடன் இருந்ததாககூறி, மதுரையைச் சேர்ந்த தேர்வர், உயர் நீதிமன்றம்,மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய தமிழ் பாட தேர்வை, ரத்து செய்து, புதிதாக, வேறு தேர்வை நடத்தகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட் தீர்ப்பின்படி, தமிழ் பாடதேர்வர்களுக்கு, புதிய தேர்வை நடத்துவதா, அல்லது,மேல் முறையீடு செய்வதா என்பது குறித்து விவாதிக்க,டி.ஆர்.பி., அதிகாரிகள், ஆலோசனை இன்று ( அக் 2)காலை நடத்துகின்றனர். இந்த விவகாரம் குறித்து...
- Get link
- X
- Other Apps
திருச்சியில்ஆசிரியர்கள் உண்ணாவிரதம் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஒருங்கிணப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். உண்ணாவிரத்தை அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் டில்லிபாபு தொடக்கிவைத்தார். உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பான இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு என்டிவிடி 2001 விதியின்படி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.