டி.இ.டி., தேர்வு: தர்மபுரி முதலிடம் ? கேள்வித்தாள், லீக் சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 8 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இது குறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர...
Posts
Showing posts from September 29, 2013