மீண்டும் பணியில் அமர்த்த கோரி நீக்கம் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி பயிற்றுநர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 14 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று மாணவர்களை 100 சதவிதம் தேர்ச்சி பெற செய்துள்ளோம். நாங்கள் அனைவரும் 40 வயதை கடந்துள்ளோம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எங்களது பதிவு மூப்பு ரத்தாகியுள்ளது. எங்கள் அனைவரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Posts
Showing posts from September 28, 2013
- Get link
- X
- Other Apps
பேராசிரியர் நேர்முகத்தேர்வை வீடியோவில் பதிவுசெய்ய முடிவு. கல்லூரி உதவிப் பேராசிரியர் நேர்முகத்தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் தவறு நடக்காமல் இருக்க நேர்முகத்தேர்வு காட்சியை வீடியோவில் பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 1,093 காலி இடங்கள் அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவி பேராசிரியர் பணிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளி ஆசிரியர்கள் போல் தகுதித்தேர்வோ, போட்டித்தேர்வோ இல்லாமல் சிறப்பு மதிப்பெண் வழங்கும் முறையில் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி, பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் ஏழரை மதிப்பெண் வீதம் 15 மதிப்பெண்ணும், பி.எச்டி.முடித்திருந்தால் 9 மதிப்பெண்ணும், ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சியுடன் எம்.பில். பட்டம் பெற்றிருந்தால் 6 மதிப்பெண்ணும், எம்.பில். இல்லாமல் ஸ்லெட், நெட் தேர்ச்சி இருந்தால் 5 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிஅனுபவ சான்று தீவிர ஆய்வு தேர்வுமுறைக்கான மொத்த மதிப்பெண் 34 ஆகும். தேர்வில் பணி