Posts

Showing posts from September 27, 2013
டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது. சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கை: முதுகலை தமிழாசிரியர் தேர்வில், 47 கேள்விகள், தவறாகவும், பிழையாகவும் அச்சிடப்பட்டுள்ளன; இதனால், கேள்விகளின் அர்த்தமே மாறிவிட்டன. சில கேள்விகளை, புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அதிக எழுத்துப் பிழைகள் இருந்தன. காங்கிரஸ் என்பதை, காதுரஸ் என்றும், அவுரங்கசீப் என்பதற்கு, அவுரதுசீப் என்றும், கணியன் பூங்குன்றனார் என்பதை, கனியன் பூதுகுன்றனார் என, பிழைகள் நீள்கின்றன.தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், 150க்கு, 47 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வழக்கில், தமிழ் பாட தேர்வை, 8,000 பேர் தான் எழுதினர்; அது, பெரிய எண்ணிக்கை இல்லை என்று, டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யார் கருத்து தெரிவித்துள்ளார்.பிழையில்லாத கேள்வித்தாள் தயாரிக்க முடியாத, டி.ஆர்.பி., தலைவர்,அந்த பதவியை வகிப்பதற்கான தக...
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு, இறுதி தீர்ப்பு வரும் வரை பணி மாறுதல் நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம். சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வின் முன் இன்று பிற்பகல் 3.45மணிக்கு விசாரணைக்கு வந்தது. போதிய நேரமின்மை காரணமாக இரு தரப்பும் செய்துகொண்ட சமரசத்தை அடுத்து நீதிபதிகள் வருகிற அக்டோபர் மாதம் 7ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.மேலும் அன்றைய தினமே வழக்கை முடித்து கொள்ள அனைத்து தரப்பும் ஒத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவரை பணி மாறுதல்கள் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்றம்உத்தரவு பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.