டிஇடி தேர்வு விவகாரம் ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து பட்டதாரிகள் மேல்முறையீடு சான்று சரிபார்ப்பு முடித்த பட்டதாரிகளும் டிஇடி தேர்வு எழுத வேண்டும் என்று ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழ் நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்புபட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினகுமார் கூறியதாவது:ஆசிரியர் பணிக்கு தகுதியான பி.எட் முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த 30 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு செய்தது. அதில் 22ஆயிரம் பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.மீதம் உள்ள 8ஆயிரம்பேருக்கு பணி கிடைக்கவில்லை.இதற்கிடையே ஆசிரியர்தகுதி தேர்வு நடத்த அரசு அறிவித்தது. சான்று சரிபார்ப்பு முடித்த 8 ஆயிரம் பேரில் 95 பேர் தங்களுக்கு பணி நியமனம் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூலை9-ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.சான்று சரிபார்ப்பு முடித்தவர்கள்ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதில்இருந்து விலக்களித்தும்,இ...
Posts
Showing posts from September 26, 2013
- Get link
- X
- Other Apps
தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி மறு தேர்வு நடத்த அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு - Dinakaran மதுரை: மதுரை கே.புதூரை சேர்ந்த விஜயலெட்சுமி, தமிழ் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணித்தேர்வில், பி பிரிவு கேள்வித்தாளில் பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க உத்தரவிடக்கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரர் சார்பில் வக்கீல் ஜெயகுமரன் ஆஜராகினர். ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் தங்கமாரி, அறிவொளி ஆஜராகினர். அவர்களிடம், தேர்வுக்கு முதல் நாள் கேள்வித்தாள் வெளியானால், தேர்வு அன்று வழங்குவதற்கு மாற்று கேள்வித்தாள் தயாராக வைத்து இருப்பீர்கள். அதேப்போல் இந்த கேள்வித்தாளுக்கு மாற்று கேள்வித்தாள் வைத்துள்ளீர் களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், மாற்று கேள்வித்தாள் உள்ளது என இருவரும் பதிலளித்தனர். பின்னர், பொதுவாக ஒரு கேள்வி...
- Get link
- X
- Other Apps
தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள 150 கேள்விகளில், பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு 110 மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். தேர்வு நடத்தப்பட்ட 150 கேள்விகளில், பிழையாக உள்ள 40 கேள்விகளை ...
- Get link
- X
- Other Apps
கொள்கை முடிவில் அரசு சமரசம் செய்து கொள்ளாது-தமிழக அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில்தெரிவித்துள்ளது. வழக்குரைஞர் பழனிமுத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும். இது தொடர்பான தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிக்கையில், ஏற்கனவே மாநில அரசுகள் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்று தெரிவித்துள்ளது.ஆதலால் தமிழக அரசு இந்த முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால் நீதிபதி சத்திய நாராயணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதி தேர்வில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் வழங்...