Posts

Showing posts from September 25, 2013
குரூப்–1 உட்பட புதிய தேர்வுகள் எதற்கும் அறிவிப்பு இல்லை: முடங்குகிறதா டி.என்.பி.எஸ்.சி.,? அரசுத் துறைகளில் ஏற்படும் காலியிடங்களை, உடனுக்குடன் பெற்று, தேர்வுகளை நடத்தி, வேலை வாய்ப்புகளை அளிக்க வேண்டிய டி.என்.பி.எஸ்.சி., அமைப்பு, முடங்கும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நடப்பு ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்–1 உட்பட எந்த தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. 29 ஆயிரம் வேலை:கடந்த ஆண்டு, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பதவிகளில் மட்டும், 116 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. குரூப்–4, குரூப்–2 பணியிடங்கள் உட்பட,29 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன.ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 300 வேலை வாய்ப்புகள் கூட அளிக்கப்படவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடவடிக்கையில் உள்ள குரூப்–4, குரூப்–2 தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளும், கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டவை. இந்த ஆண்டு, இதுவரை, குரூப்–1 தேர்வு அறிவிக்கப்படவில்லை. அரசுத் துறைகளில், துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட குரூப்–1 பணிகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது.
தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான போட்டித் தேர்வில், தமிழ்ப் பாடத்துக்கான பி வரிசை கேள்வித் தாளில் 47 எழுத்துப் பிழைகள் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் அளிக்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பிழையான 40 கேள்விகளையும் நீக்கி விடுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. அதை ஏற்க மறுத்த நீதிபதி எஸ்.நாகமுத்து, மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி, தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அரசு கூடுதல் தலை