Posts

Showing posts from September 23, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்ளுபடி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விலக்கு அளிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள் அன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடத்துக்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வெழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சுமார் 156 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இவர்களது மனுக்களை ஒன்று சேர்த்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், திங்கள் அன்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயமாக்கியது தேசிய ஆசிரியர் பயிற்சி கல்வி வாரியம். ஆனால், இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டுமே தேர்வெழுதாமல் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது. 18 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்படவில்லை. இதையடுத்து இவர்கள் சார்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதி...
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் அகில இந்திய ஆசிரியர் சங்க செயலாளர் பேட்டி திண்டுக்கல், செப்.23- தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று திண்டுக்கல்லில் அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் செயலாளர் அண்ணாமலை கூறினார். அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் செயலாளர் அண்ணாமலை திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:- பழைய ஓய்வூதிய திட்டம் மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கும், தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.10 ஆயிரம் சம்பள வித்தியாசம் உள்ளது. அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக வழங்க வேண்டும். தேர்தல் நேரத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால், இதுவரை அமல்படுத்த வில்லை. 2¼ லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன்கருதி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் இனவாரியாக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி மதிப்பெண் ...
சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்குதகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?-dinakaran சென்னை : கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்குதகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும். தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குமட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்குபணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில...