கேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம்: டி.ஆர்.பி., முடிவு முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ் பாட கேள்வித்தாளை, பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு, அபராதம் விதிப்பதுடன், அந்த அச்சகத்தை, கறுப்பு பட்டியலில் சேர்க்கவும், டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,881 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வு எழுதினர். இதன் முடிவு, இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழ் பாட கேள்வித்தாளில், 52 கேள்விகளில், எழுத்துப்பிழைகள் இருந்தன என்றும், இதனால், அதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், மதுரையைச் சேர்ந்த ஒரு தேர்வர், ஐகோர்ட், மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கு, டி.ஆர்.பி.,க்கு, கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. "கேள்விகளில் உள்ள எழுத்துப்பிழையால், கேள்வியை புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படவில்லை, எனினும், அந்த கேள்விகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கேள்விகளை கணக்கிட்டு, மதிப்பெண் வழங்கலாம்' என்ற, டி.ஆர்.பி.,யின் கருத்தை, கோர்ட் ஏற்கவில்லை. "பிழையான...
Posts
Showing posts from September 22, 2013