ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் சென்னை:சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் தலைவர் அன்பரசு, நிருபர்களிடம் கூறியதாவது:முந்தைய தி.மு.க., ஆட்சியில், பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர். 2010, ஆக., 23ம் தேதிக்கு முன், பட்டதாரி ஆசிரியர் பணிக்காக, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டது. இதில், தகுதி வாய்ந்த, 70 பேர் விடுபட்டுவிட்டனர். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை காரணம் காட்டி, "70 பேருக்கும் பணி வழங்க முடியாது' என, தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில், ஜூலை, 9ம் தேதி தீர்ப்பு வந்தது.டி.இ.டி., தேர்வு முறை, மேற்கண்ட தேதிக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்களுக்கு பொருந்தாது எனவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை, காலம் தாழ்த்தாமல் அமல்படுத்...
Posts
Showing posts from September 21, 2013
- Get link
- X
- Other Apps
தமிழ்நாட்டில் 50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியிடு சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளைபொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று அறிவ...