டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதிகள் மாற்றம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிகளில் வேறு தேர்வு நடைபெற உள்ளதால், அக்டோபர் 25, 26 மற்றும் 27ம் தேதிக்கு முதன்மைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல்,இந்து சமய அறநிலையத்துறையின் 4-ம் நிலைசெயல் அலுவலர் பதவிக்கான தேர்வு அக்டோபர் 26-ல் இருந்து நவம்பர் 16-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Posts
Showing posts from September 19, 2013
- Get link
- X
- Other Apps
முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு "பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம் வழங்க வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ராஜபாளையம் ராஜேஸ்வரி தாக்கல் செய்த மனு: 1998 ல் பி.ஏ.,(கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்-நிறுவன செயலாண்மை) படித்தேன். 2008 ல் எம்.காம்., (வணிகவியல்) முடித்தேன். பி.எட்., தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர்கள் 2895 பேர் நியமனத்திற்கான தேர்வு 2012 மே 27 ல் நடந்தது. வணிகவியல் பாடத்திற்கு நான் தேர்வு எழுதினேன். மொத்தம் 150 மதிப்பெண்ணில், அதிகபட்ச மதிப்பெண் 121 எடுத்திருந்தனர். எனக்கு 109 மதிப்பெண் கிடைத்தது. தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதிப் பட்டியலை 2012 டிச.,11 ல் டி.ஆர்.பி., வெளியிட்டது. என் பெயர் இல்லை. டி.ஆர்.பி., அலுவலகத்தில் விசாரித்த போது, "நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை நீங்கள் பெறவில்லை. பி.காம்.,-எம்.காம்.,- பி.எட்
- Get link
- X
- Other Apps
வினாத்தாள் பிழை: தமிழாசிரியர் நியமனத்திற்கு மறுதேர்வா : ஐகோர்ட் உத்தரவு முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரி தாக்கலான வழக்கில், மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசுத் தரப்பில் விவரம் தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை, புதூர், விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவில், "முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள், 605 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், ஜூலை 21ல் தேர்வு நடந்தது. "பி' வரிசை வினாத்தாளில், 47 கேள்விகளில் அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி, விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டார். "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது; டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக வேண்டும்' என, ஏற்கனவே நீதிபதி உத்தரவிட்டார். இதுபோல், திருச்சி, அந்தோணி கிளாராவும் மனு செய்தார். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், நேற்று இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்களின் தரப்பில் வழக்கறிஞர்கள், ஜெயகுமாரன், லஜபதி ராய் மற்றும்