கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு மதுரை, கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தகுதித்தேர்வு ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்தவர் திவ்யா. இவர், பள்ளி கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– நான், பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம் படிப்பு முடித்து பி.எட் படித்துள்ளேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். 93 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றேன். எனது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. தண்டிக்க வேண்டும் காரணம் கேட்டபோது, பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம், பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது அல்ல என்றும், இதன் காரணமாகவே எனக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். 27.11.2012 அன்று பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம், பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது...
Posts
Showing posts from September 17, 2013
- Get link
- X
- Other Apps
முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு மதுரை, செப்.17- முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். முதுகலை ஆசிரியர் பணி மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது. எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, இதுபோன்று ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்து இருப்பதற்காக அதிக...