Posts

Showing posts from September 15, 2013
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு சென்னை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.10 நாட்களுக்குள் வெளியீடு இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணி முடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்த குழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து ...
பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம் பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர் பணியிடம், மிகவும் முக்கியமானது. இளநிலை உதவியாளர்களுக்கு மேல் நிலையிலும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு, கீழ் நிலையிலும், உதவியாளர்கள் பணி புரிகின்றனர். கோப்புகளை உருவாக்குவது, அதை பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை, உதவியாளர்கள் செய்கின்றனர். குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும், நேரடியாக, டி.என்.பி.எஸ்.சி., மூலம், உதவியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். பெரும்பாலும், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்களாக, பதவி உயர்வு செய்யப்படுவர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், பல மாதங்களாக, காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிக்கல்வித் துறையில், 900 பணியிடங்களும், தேர்வுத் துறையில், 100 பணியிடங்கள் வரையிலும், காலியாக இருப்பதாக தெரிகிறது. இந்த துறைகளில், தற்போது பணிபுரியும் இளநிலை உதவியாளர்களில், அதிகம் பேர், உதவியாளர் பதவி உயர்வுக்கு, தகுதி பெறாமல் இருப்பதாகவும் கூறப்பட...