உதவி பேராசிரியர் பணிக்கு செப்.,16ல் சான்றிதழ் சரிபார்ப்பு உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது. தமிழக அரசு கலைக் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.தேர்வு செய்வதில், பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை துவங்க, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து, 10 நாட்கள் வரை நடக்க உள்ளது. இதில், கல்வி தகுதிக்கு, 9 மதிப்பெண்ணும், பணி அனுபவத்திற்கு, 15 மதிப்பெண்ணும், அளிக்கப்படும். கல்வி தகுதியில், பி.எச்.டி., படித்திருந்தால், 9 மதிப்பெண்ணும், எம்.பில்., உடன் நெட் அல்லது ஸ்லெட் முடித்திருந்தால், 6 மதிப்பெண்ணும், முதுகலை பட்டத்துடன், நெட் அல்லது ஸ்லெட் முடித்திருந்தால், 5 மதிப்பெண்ணும் அளிக்கப்படும். பணி அனுபவத்தில், ஒரு ஆண்டிற்கு 2 மதிப்பெண் வீதம் அளிக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன், தேர்வு செய்யப்பட்டோர் பட...
Posts
Showing posts from September 13, 2013
- Get link
- X
- Other Apps
தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. 2,881 பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர். இதில் தமிழ் பாடத்துக்கான பி வரிசை வினாத்தாளில் மட்டும் 47 கேள்விகளில் அச்சுப் பிழைகள் இருந்தன. இதையடுத்து, தமிழ் பாடத்துக்கு மட்டும் மறுதேர்வு நடத்தலாமா என பரிசீலிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கேள்விகள் அனைத்தும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலேயே உள்ளன என நிபுணர் குழு அறிக்கை அளித்ததால், புரியாத சில கேள்விகள் மட்டும் தேர்விலிருந்து நீக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கான தேர்வில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள்ளதால் அந்தப் பிழைகளுக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில...