Posts

Showing posts from September 10, 2013
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழ் பாடத்திற்கான முடிவை வெளியிட உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 21ஆம் தேதி தமிழ் தேர்வு நடைபெற்றது.இதில் தமிழ் தேர்வில்47கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும்,இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் விஜயலட்சுமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,தமிழ் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்,இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வரும்16ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது
2012 தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற 612 பேருக்கு டிஆர்பி மீண்டும் அழைப்பு நெல்லை: கடந்த ஆண்டு டிஆர்பி தேர்வில் வெற்றி பெற்ற 600க்கும் மேற்பட்டவர்களுக்கு டிஆர்பி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வு மூலம் பணி நியமனம் நடக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு நடந்த டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர், இன்று வரை பல்வேறு காரணங்களுக்காக பணிநியமன உத்தரவு கிடைக்காமல் உள்ளனர்.குறிப்பாக, பிஏ ஆங்கிலத்திற்கு நிகராக கருதப்படும் பிஏ ஆங்கிலம் மற்றும் கம்யூனிகேஷன், பிஏ கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பள்ளி ஆசிரியர் என்ற கனவோடு நேர்காணல் வரை சென்றனர்.  ஆனால் நேர்காணலில், ‘ரிமார்க்’ என அறிவித்து பணி நியமனம் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டனர்.இதேபோல் அறிவியல் உள்ளிட்ட வேறு சில பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கும் பணிநியமன உத்தரவு கிடைக்கவில்லை. இது தொடர்பாக, சிலர் தொடர்ந்த வழக்கில்அவர்களது கல்வி தகுதியை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் கடந்...