Posts

Showing posts from September 7, 2013
டி.இ.டி., தேர்வு எழுதியோருக்குசான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. கடந்த ஆண்டு, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ்களை சமர்ப்பிக்காத மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு, கடைசி வாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னையில், நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது. கடந்த ஆண்டுநடந்த, சான்றிதழ் சரிபார்ப்பிற்குப்பிறகே, பல கல்லூரிகளில், மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. இதனால், தேர்வில் வெற்றி பெற்றும், ஏராளமானோர், சான்றிதழ் சரிபார்ப்பில்பங்கேற்கவில்லை. இவர்களுக்கு, கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்க, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் உத்தரவிட்டார். அதன்படி, 680 பேருக்கு, சான்றிதழ் சரிபார்க்கும் பணி, சென்னை, அசோக் நகர், மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று துவங்கியது. இடைநிலை ஆசிரியர் தேர்வில், 171 பேரை அழைத்ததில், 44 பேரும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில்,162 பேரை அழைத்ததில், 141 பேரும் பங்கேற்றதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து இன்றும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.இரு நாட்களில் பங்கேற்காததேர்வர்கள், கடைசி நாளான, 10ம் தேதிநடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங...
இடைநிலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கலாம் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டுஉத்தரவு புதுடெல்லி, இதுவரை தடைபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணிமாறுதல் வேண்டி விண்ணப்பித்தால் அவர்களுக்கு அரசின் ஆணைக்கு உட்பட்டுபணிமாறுதல் வழங்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு கடந்த 2007–ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தமிழககல்வித்துறை 2007–ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இந்த ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தனர். இந்தமனு, தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டு, பின் இருநபர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மாநில அளவில் இடைநிலை ஆசிரியர் தேர்வு முறையானது மாநில பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை அ...