1743 பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது, அவர்கள் உயர்நீதிமன்றத்தில் சென்று,தீர்ப்பினை பெற்றுக்கொள்கிறோம் என மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொண்டதால் நீதி அரசரும் அவ்வாறே ஆணை பிறப்பித்துள்ளார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கினை நடத்திவருகிறார்கள்.அவர்களை தொடர்புகொள்ள 9843156296
Posts
Showing posts from September 5, 2013
- Get link
- X
- Other Apps
TNPSC Group 2 - Apply Online - for Degree candidates. TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு - 1064 பணியிடங்கள் வணிக வரித்துறை ஆணையர், சார்பதிவாளர் உள்ளிட்ட 19 பதவிகளுக்கான 1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 5 முதல் அக்டோபர்4-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு காலியிடங்கள் : 1064 கட்டணம் : ரூ.125 விண்ணப்பம் வெளியாகும் தேதி: 05.09.2013 விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.10.2013 கட்டணம் செலுத்த கடைசி நாள்: 08.10.2013 (பேங்க்/போஸ்ட் ஆபீஸ் மூலம்) தேர்வு நடைபெறும் நாள்: 01.12.2013,10.00 AM to 1.00 AM
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது. தகுதித்தேர்வு மூலம் அரசுபள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வுபணிகளை அக்டோபர்மாத இறுதிக்குள் முடிக்க தேர்வுவாரியம்திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களில் பதிவுமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
- Get link
- X
- Other Apps
அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் நீக்கம் ஏன்?: பரபரப்பான பின்னணி தகவல்கள் சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச் செல்வன் திடீரென இன்று நீக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையின்பேரில் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தமிழ் கலாச்சாரத் துறை அமைச்சர் வைகைச் செல்வன், அப்பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கவனித்து வந்த இலாகாவை அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி பொறுப்பிலிருந்தும் நீக்கம் இதனிடையே அ.தி.மு.க. இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் வைகைச்செல்வன் நீக்கப்பட்டுள்ளார். பதவி பறிப்புக்கு காரணம் என்ன? முதலமைச்சர் ஜெயலலிதா கோடநாடு சென்று திரும்பியதிலிருந்தே, தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும், சில அமைச்சர்களின் தலை உருட்டப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தது.இதனால் ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் நாமும் இடம்பெற்றிருக்கிறோமோ என்ற அச்சத்திலேயே பெரும்பால...
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு TRB கணிப்பு. ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்)தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகிலஇந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும். ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இந்த சட்டம் கடந்த 23.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அளவிலான முதல் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம்நடந்தது. லட்சக்கணக்கான ஆசிரியர் தேர்வு எழுதியதில் வெறும் 0.3 சதவீதம்பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.அப்போது தேர்வு நேரம் (1½ மணி) போதாது என்ற குற்றச்சாட்டை பெரும்பாலான ஆசிரியர்கள் முன்வைத்ததால் தேர்வு நேரம் 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டு துணை ஆசிரியர் தகுதித்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி விகிதம் ஏறத்தாழ 3 சதவீதமாக உயர்ந்தது. ஆசிரியர் பணி காலி இடங்க...
- Get link
- X
- Other Apps
அமைச்சர் வைகைச்செல்வன் அதிரடி நீக்கம்: தமிழக அமைச்சரவையிலிருந்து வைகைச்செல்வன் இன்று நீக்கப்பட்டுள்ளார். இதேப்போல்,அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாகமுதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். வைகைச்செல்வன் வகித்து வந்த பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்டபொறுப்புகள், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனிப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது