டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு அறிவிப்பு சென்னை: 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சார் பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது.
Posts
Showing posts from September 4, 2013
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் தினம் : முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் தினம் எளிமையின் இருப்பிடமாகவும், உண்மையானஉழைப்பின் உறைவிடமாகவும், ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி இந்தியாவின் உயர்ந்த பதவியாம் குடியரசுத் தலைவராக உயர்ந்த மாமனிதர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனை வருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்” என்ற குறளின் மூலம் கல்வியறிவு பெற்ற ஒவ்வொருவரும் தனது மகிழ்ச்சிக்கு காரணமான கல்வி, உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதைக் கண்டு மென்மேலும் அக்கல்வி அறிவினை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புவர் என்ற வள்ளூவர் வழங்கிய கருத்திற்கேற்ப டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் தான் கற்ற கல்வியை அனைவரும் பெற்று வாழ்வில் உயர்ந்து மகிழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த முன் உதாரணமாக விளங்கும் வகையில் ந
- Get link
- X
- Other Apps
370 ஆசிரியர்களுக்கு டாக்டர்ராதாகிருஷ்ணன் விருது தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்களுக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர். மாவட்டங்களில்இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். சென்னைசேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழம
- Get link
- X
- Other Apps
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது?-Dinamani முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக1,500 பேர் ஆட்சேபம் தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளித்திருந்தனர். இந்த ஆட்சேபங்களைப் பரிசீலித்த நிபுணர் குழுக்கள் தங்களது பரிந்துரைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சமர்ப்பித்தனர்.