டி.இ.டி. விடைத்தாளில் குளறுபடி.... நிவர்த்தி செய்யுமா டி.ஆர்.பி திருச்சி: நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாளிலும், அதற்காக தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட விடைத்தாளிலும் தவறுகள் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. அதை சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மூன்றாவது முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு, கடந்த ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில் நடந்தது. முதல் நாள், ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்களுக்கும்; இரண்டாம் நாள், பி.எட்., முடித்தவர்களுக்கும் தேர்வு நடந்தது. இவை, இரண்டிலும் லட்சக்கணக்கானோர் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், இரண்டு தேர்வுகளிலும் வினாத்தாளிலும், அதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட விடைத்தாளிலும் தவறுகளும், முரண்பாடும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் பட்டயப் பயிற்சி தகுதித் தேர்வில், ஏழு வினாக்கள் முரண்பாடாக கேட்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பிரிவில், குமரகுருபரின் காலம் எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 17ம் நூற்றாண்டு என்பது சரியான விடை. அதுவே விடைத்தாளிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏழாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில்,
Posts
Showing posts from September 3, 2013