ஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முக்கியவிடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) இன்று வெளியிடப்பட்டுள்ளன.இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால்அதற்குரிய ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு செப்டம்பர் 2-ம்தேதி மாலை 5 மணிக்குள் தேர்வர்கள் மனு செய்யலாம். இந்த மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ அல்லது தபால் மூலமாகவோ செப்டம்பர் 2-ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஆகஸ்ட் 18-ம் தேதியும் நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 6.50 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு இப்போதுஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுநேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்போது முக்கிய விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, முக்கிய விட
Posts
Showing posts from August 27, 2013
- Get link
- X
- Other Apps
உண்ணா விரதப் போராட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் 09.07.2013 அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது . தேதி: 29.08.2013,வியாழக்கிழமை நேரம் :காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம் : சேப்பாக்கம் ஸ்டேடியம் எதிரில் ,சென்னை அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்! இப்படிக்கு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்
- Get link
- X
- Other Apps
ஆக.30-ல் மறியல் போராட்டம் : 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு மத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும்மறியல் போராட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற் குழு முடிவெடுத்துள்ளது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 25.8.2013 அன்று குற்றாலத் தில் மாநிலத் தலைவர் தி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு, சங்கத்தின் மாநிலத் தலைவர் தி.கண்ணன், பொதுச் செயலாளர்(பொறுப்பு) செ.பாலச்சந்தர், பொருளாளர் ச.மோசஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஜாக்டி அரசு ஊழியர் பேரமைப்பின் ஒன்றுபட்ட தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த ஊதியம் கடந்த 1.6.1988 முதல் 22 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ்நாட்டு ஆசிரியர்கள் பெற்று வந்தனர். இந்நிலையில் தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவிலும், ஒரு நபர்
- Get link
- X
- Other Apps
டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்–4 தேர்வு ‘கீ ஆன்சர்’ வெளியீடு இணையதளத்தில் பார்க்கலாம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரைவாளர், சர்வேயர்,வரித்தண்டலர் ஆகிய பதவிகளில் 5,566 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) குரூப்–4 தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 12 லட்சத்து 21 ஆயிரம் பேர் எழுதினார்கள்.இந்த நிலையில், தேர்வுக்கான ‘கீ ஆன்சர்’ இரவு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ( www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டது. இதில், தமிழ், ஆங்கிலம், பொதுஅறிவு ஆகிய தாள்களில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஸ்கேனிங் செய்யப்பட்டு அவற்றுக்கான விடைகள் குறிப்பிடப்பட்டு உள்ளன. விடைகள் தொடர்பாக ஏதேனும் முறையீடுகள் இருந்தால் அதுகுறித்து செப்டம்பர் 1–ந் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.