டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன் தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும்மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.
Posts
Showing posts from August 25, 2013
- Get link
- X
- Other Apps
உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது . அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் 09.07.2013 அன்று தகுதி தேர்வு இல்லாமல் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது . ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதை காலம் தாழ்த்தி வருகிறது . எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மேலான கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள உண்ணா விரதப் போராட்டம் நடைபெற உள்ளது . தேதி: 29.08.2013,வியாழக்கிழமை நேரம் :காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம் : சேப்பாக்கம் ஸ்டேடியம் எதிரில் ,சென்னை அனைவரும் தவறாமல் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையினை வென்றெடுக்க பாடுபடுவோம்! இப்படிக்கு சான்றிதழ்சரிபார்க்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருக்கும் பாதிக்கப
- Get link
- X
- Other Apps
தகுதித்தேர்வு மூலம் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டம் தற்போது நடத்தப்பட்ட தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த 17, 18–ந் தேதிகளில் நடத்தப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தனித்தனியாக நடைபெற்ற இந்த தேர்வுகளை தமிழகம் முழுவதும் 6½ லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதி உள்ளனர். தகுதித்தேர்வுக்கான ’கீ ஆன்சர்’ ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு தனியார் இணையதளங்கள் தகுதித்தேர்வுக்கான கீ ஆன்சர்–ஐ வெளியிட்டு உள்ளன. தேர்வு எழுதிய ஆசிரியர்களும் அதைப் பார்த்து தங்களுக்கு