போலி வினாத்தாள் மோசடி டி.ஆர்.பி ஊழியர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு தர்மபுரி : ஆசிரியர் தகுதித் தேர்வு போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய(டி.ஆர்.பி) ஊழியர்களிடம் விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 17, 18ம் தேதிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு (டெட்) நடந்தது. முதல் நாள் தேர்வுக்கு முன்னதாகவே வினாத் தாளை தருவதாக கூறி மோசடி நடந்தது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் புகார் செய்தார்.அதில், ஒரு கும்பல் ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் தருவதாக கூறி தன்னிடம் ரூ.1 லட்சத்தை பெற்றுக் கொண்டு, தராமல் ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். இதன் பேரில் போலீசார்நடத்திய விசாரணையில் தர்மபுரி அருகே 6பேர் கொண்ட கும்பல் சிக்கியது. இந்த மோசடி தொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் இருளப்பட்டி இளையராஜா (30), கிருஷ்ணகிரியை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் கணபதி, அவரது மனைவி எஸ்தர், ஓசூர் அடுத்த காமன்தொட...
Posts
Showing posts from August 23, 2013