Posts

Showing posts from August 22, 2013
அரசு மேனிலைப்பள்ளியில் 652 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவு 2009ம் ஆண்டு நிலவரப்படி உச்ச நீதி மன்ற தீர்ப்பு மற்றும் உயர்நீதி மன்ற ஆணைப்படி அரசால் 652 கணினி பயிற்றுநர் பணியிடமானது காலியாக்கப்பட்டு, அப்பணியிடங்கள் B.Sc.,B.Ed., பட்டம் முடித்த கணினி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசு மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள 652 கணினி பயிற்றுநர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது .  மேலும், 22-10-2013 க்குள் நியமனத்திற்கானபெரும்பாலான பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் பானுமதி, சசிதரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளார்கள் என்று கணினிஅறிவியல் B.Ed., சங்கத் தலைவி திருமதி. குணவதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதி தேர்வு: விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய டெல்லியில் இருந்து நிபுணர் குழு -ஒரு வாரத்தில் கீ–ஆன்சர் ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்களை டெல்லிக்குழுவினர் வந்து மதிப்பீடு செய்ய உள்ளனர். ஒரு மாதத்திற்குள் தேர்வு முடிவை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த 17–ந்தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் –1 நடைபெற்றது. 18–ந்தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள்–2 நடைபெற்றது.இந்த தேர்வுகளை மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு முடிந்ததும் வினாத்தாள்கள் பண்டல் பண்டலாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கொண்டு வரப்பட்டன. இப்போது அந்த விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடைபெறுகிறது. இந்த பணியை கம்ப்யூட்டரில் நிபுணத்துவம்வாய்ந்த குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த பணி எப்போது முடியும்? தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று கேட்டதற்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:– ஒரு வாரத்தில் கீ–ஆன்சர் ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தா
ஆசிரியர் தகுதித் தேர்வு: விடைத்தாள் மதிப்பீடு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு. ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி செய்ய
ஆசிரியர் தகுதி தேர்வு போலி வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி: தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள்பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து முக்கிய நபரின்செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர்.   அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய்