ஆசிரியர் தகுதி தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம், 17ம் தேதிக்குதள்ளிவைத்து, சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. சென்னை, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல், மத்திய அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், 2011, பிப்., 11ம் தேதி, ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில்,"தகுதித் தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருப்பவர்களே தேர்ச்சி பெற்றவர்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் ஆகியோருக்கு, அந்தந்தமாநில அரசு சலுகை வழங்கலாம்” என கூறப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், ஆந்திரா, அசாம், கேரளா உள்ளிட்ட, 11 மாநில அரசுகள், ஆசிரியர் தகுதித் தேர்வுகளில், மிகவும் பிற்படுத்தப...
Posts
Showing posts from August 20, 2013
- Get link
- X
- Other Apps
டி.இ.டி., பயிற்சி மையங்களுக்குகட்டுப்பாடு தேவை: கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை - தினமலர் செய்தி தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு குரூப், 2 வினாத்தாள் அவுட்டானது. இந்தாண்டு, டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடும், கண்காணிப்பும் அவசியம் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டாக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், குறுக்கு வழியில் ஆசிரியர் பணிக்கு செல்ல முயல்வோரும், தகுதியில்லாதவர்களும், குறுக்கு வழியில் ஆசிரியராகி விட வேண்டும் என்ற அடிப்டையில், தேர்வு வினாத்தாள்களை பல லட்சம் கொடுத்து வாங்க முன் வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இது போன்ற போக்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு நடந்த குரூப் 2 தேர்வு வினாத்தாள் தர்மபுரி மற்றும் ஈரோட்டில் அவுட்டானது. கடந்த, 17ம் தேதி டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்திருப்பதாக தர்மபுரி...