Posts

Showing posts from August 18, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி: தருமபுரியில் பெண் உள்பட 6 பேர்கைது வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டவர்கள் கணபதி, இளையராஜா, எஸ்தர், கிருஷ்ணப்பா, சந்திரசேகரன், அசோகன். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாளை முன்கூட்டியே தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 6 பேரை தருமபுரி மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்திய குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதைத்தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் அனைத்துப் போட்டித் தேர்வுகளின் போதும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்களை சிலர் சனிக்கிழமை தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே விநியோகிக்கப் போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும்,ஒரு கும்பல் தன்னிடம் ரூ.5 லட்சம் தந்தால், தருமபுரிக்கு வந்து வினாத்தாள் தருவதாகக் கூறியதாக போலீஸில் தேன்கனிக்கோட்டை, சாரண்டஹள்ளியைச் சேர்ந்த அசோக்குமார்(35) புகார் அளித்தார். அதன்பேரில், தருமபுரியில் மாவட்டக...
ஆசிரியர் தகுதித் தேர்வு: தாழ்த்தப்பட்டவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கிடக் கோரி வழக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்கிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய, மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ். கருப்பையா பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 2010-ஆம் ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும்,இந்த தேர்ச்சி மதிப்பெண்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்குவது பற்றி ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டு கொள்கைகளின்படி அந்தந்த மாநில அரசுகள...