பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. *இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும், *இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) திரு. முத்து பழனிசாமி அவர்களையும், *இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) திரு.பாலமுருகன் அவர்களையும், *இணை இயக்குநர் (தொழிற்கல்வி) திரு.தர்ம ராஜேந்திரன் அவர்களையும், *இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிர்வாகம்) திருமதி.லதா அவர்களையும், *இணை இயக்குநர் (தொடக்கக் கல்வி இயக்கம்-நிதி உதவிப் பெறும் பள்ளிகள்) திரு.செல்வராஜ் அவர்களையும், *இணை இயக்குநர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) திரு.நாகராஜ முருகன் அவர்களையும், *இணை இயக்குநர் (மாநில கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்) திருமதி.ஸ்ரீதேவி மற்றும் உமா அவர்களையும், *இணை இயக்குநர் (அரசுத் தேர்வுகள் இயக்ககம்) திருமதி.ராஜராஜேஸ்வரி அவர்களையும், *இணை இயக்குநர் (நூலகம்) தி
Posts
Showing posts from August 12, 2013
- Get link
- X
- Other Apps
அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - Dinamalar தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழக அரசு, கடந்த சட்ட மன்ற கூட்ட தொடரில், 50 அரசு நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தது. நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், இதுகுறித்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. இனிமேல், உயர்நிலை பள்ளியாக மாற்றி அறிவித்தாலும், தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நியமித்தல், அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் மீண்டும் அழைத்து வருதல் என்பது நடக்காத காரியங்கள். அரசின் அறிவிப்பு, வெறும் கண்துடைப்பானதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனால், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகளாக உயர்த்தப்படும் என, அரசு அறிவித்தது மட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது.