Posts

Showing posts from August 11, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் தேர்வு சுமூகமாகவும், எந்தவிதப் பிரச்னையும் இன்றி நடைபெற பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட பொறுப்பாளர்கள் விவரம் (மாவட்டம், அதிகாரி): 1. விழுப்புரம் - இயக்குநர் தங்கமாரி 2. கடலூர் - இணை இயக்குநர் உமா 3. காஞ்சிபுரம் - இயக்குநர் இளங்கோவன் 4. திருவள்ளூர் - இணை இயக்குநர் உஷாராணி 5. சென்னை - இயக்குநர் அறிவொளி உள்பட 31 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.. திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த ஹால் டிக்கெட்டுகள் திருத்தப்பட்டுள்ளன.ஹால் டிக்கெட்டுகள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. முதல் தாள் தேர்வுக்கு 48 ஹால் டிக்கெட்டுகளும், இரண்டாம் தாள் தேர்வுக்கு 834 ஹால் டிக்கெட்டுகளும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்களுக்கு வெவ்வேறு ஊரில் தேர்வு ...
ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு: முதல்வருக்கு 10 ஆயிரம் பேர் கடிதம் சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அதனடிப்படையிலான பணி நியமனத்தில்,இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி,ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும்,10 ஆயிரம் பேர்,முதல்வருக்கு கடிதம்எழுதியுள்ளனர். இதுகுறித்து,பொதுப் பள்ளிக்கான மாநில மேடை,பொதுச் செயலர், பிரின்ஸ்கஜேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில்,டி.ஆர்.பி.,நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில்,அனைத்துபிரிவினருக்கும் தேர்ச்சி விகிதம்,60 சதவீதம் என,நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்,பழங்குடியினர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு,இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்,அரசு,மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என,தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இருந்தும் இப்பிரிவினருக்கு,மதிப்பெண் தளர்வு வழங்கவில்லை. இது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது;ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது அரசு வேலைக்கான தேர்வு மட்டும் அல்ல. இதில் தேர்ச்சி பெற்றால் தான்,தனியார் பள்ளிகளிலும் வேலை செய்ய முடியும். மதிப்பெண் தளர்வு வழங்காதது,ஒடுக்கப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை...
முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான,இறுதி, "கீ-ஆன்சர்',வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என,டி.ஆர்.பி.,வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி,முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது.1.67லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர்.   இதற்கான தற்காலிக, "கீ-ஆன்சர்',டி.ஆர்.பி.,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்விமற்றும் விடைகள் குறித்து, 1,000தேர்வர்கள்,மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தேர்வர்களின் கருத்துக்களை,பாட வாரியான நிபுணர் குழு,ஆய்வு செய்து வருகிறது.  இது குறித்து,டி.ஆர்.பி.,வட்டாரங் கள் கூறுகையில், "விடை தவறாக இருந்தால்,அதற்குரிய மதிப்பெண்,தேர்வர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக,சம்பந்தபட்ட கேள்வி,தேர்வில் இருந்து நீக்கப்படும். சரியான கேள்வி பதில்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, 20ம் தேதிக்குள், இறுதி, "கீ-ஆன்சர்'வெளியிடப்படும்,'என,தெரிவித்தன. ஒவ்வொரு கேள்விக்கும், 1மதிப்பெண் வீதம்,மொத்தம், 150மதிப்பெண்களுக்கு, கேள்விகள்கேட்கப்பட்டன.  இதில், 10முதல், 15கேள்விகளோ அல்லது அதற்கான ...
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்ய வேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். மாதத்திற்கு குறைந்தபட்சம் 2 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும். 2 அலுவலகங்களை பார்வையிட வேண்டும். செப்டம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் 8 பள்ளிகளும், இதர மாதங்களில் 12 பள்ளிகளும் பார்வையிட வேண்டும்.       மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஒரு கண்காணிப்பாளர்,இரண்டு உதவியாளர் கொண்ட குழு ஆண்டாய்வு செய்ய வேண்டிய உதவி தொடக்க கல்வி அலுவலகங்களுக்குஇரண்டு அல்லது மூன்று முறை சென்று அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொண்ட பள்ளி ஆய்வுகள் சார்ந்த கோப்புகள், தமிழக அரசு அறிவித்துள்ள பலவகையான நலத்திட்டங்கள்,மாணவர்களுக்குசென்றடைந்தது சார்பான விபரங்கள் ஆகியவை குறித்து ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும்.       மாவட்ட தொடக்க கல்வி ...