Posts

Showing posts from August 7, 2013
Image
டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு சென்னை: "வரும் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 17ம் தேதி காலை, இடைநிலை ஆசிரியர் பணிக்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை, 2,68,160 பேர் எழுதுகின்றனர். மறுநாள் 18ம் தேதி காலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு நடக்கிறது. இதை, 4,11,634 பேர் எழுதுகின்றனர். முதல் தாள் தேர்வு, 870 மையங்களிலும், இரண்டாம் தாள் தேர்வு, 1,070 மையங்களிலும் நடக்கின்றன. ஏழு லட்சம் பேர், தேர்வை எழுதுவதால், தேர்வை கண்காணிப்பதற்கு, டி.ஆர்.பி., தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார் பதவியேற்றுள்ள நிலையில், டி.இ.டி., தேர்வு, விரைவில் நடக்க உள்ளது. தேர்வு ஏற்பாடுகள் குறித்து, விபு நய்யார் கூறியதாவது: அதிகமான தேர்வ...
ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM? பயப்படவேண்டாம். TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பயன்படுத்துவது Firefox browser ஆக இருந்தால், அது .ASPX File ஆக download ஆகும். அதை download செய்த பிறகு, அதனை Rigth Click செய்து, Open with , Adobe Reader என கொடுக்கவும். File open ஆகி விடும். Print எடுத்துக்கொள்ளலாம். Google-Chrome ல் சற்று எளிமையாக ஹால்டிக்கெட் லவுன்லோட் செய்ய முடிகிறது.POPUP எனப்படும் செட்டிங்ஸ் உங்கள் ப்ரௌசரில் DISABLE ஆகி இருந்தால் முதலில்அதனை ENABLE செய்து பின் ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கவும். நிறைய ஆசிரியர்கள் இந்த வாசகம் “Corresponding Record Was Not Found... Please Check Your Details and Retry!” வருகிறது என்கின்றனர். இதற்கு காரணம் paper 1 & 2 எதற்கு நீங்கள் அப்பளை செய்து உள்ளீர்களோ அந்த OPTION ஐ click செய்தால் இப்பிரச்சனை வராது. மாற்றி CLICK செய்வதாலேயே வருகிறது.
பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர் சென்னை: பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார். கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, எஸ்.எஸ்.ஏ., இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் ஆகியோருடன், நேற்று காலை, 9:00 மணிக்கு, சென்னை, வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அமைச்சர் சென்றார். அங்கு, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றார்.  பின், 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை எடுக்கும்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன், கற்றல் - கற்பித்தல் குறித்து பேசினார். மாணவரோடு மாணவராக, வகுப்பறையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் எடுக்க வைத்தார். இதை சற்றும் எதிர்பாராத ஆசிரியருக்கு, ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறு பக்கம் பதற்றமும் ஏற்பட்டது. பின், நூலகம், உடற்பயிற்சி வகுப்பு உள்ளிட்டவற்றையும், அமைச்சர் பார்வையிட்டார் .சென்னை, மே...