Posts

Showing posts from August 4, 2013
டி.ஆர்.பி., புதிய தலைவராக விபுநய்யார் பதவியேற்றார் டி.ஆர்.பி.,புதிய தலைவராக,விபு நய்யார்,பதவியேற்றார். டி.ஆர்.பி.,தலைவர் பதவியில்,இரண்டு ஆண்டுகளாகஇருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி,மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு,தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார்.  இதையடுத்து,நேற்று முன்தினம்,டி.ஆர்.பி.,பதவியில் இருந்து,விடை பெற்றார். இவரது காலத்தில்,30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு,ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்ற டி.இ.டி.,தேர்வை,வெற்றிகரமாக நடத்தினார். இரு டி.இ.டி.,தேர்வுகள்,முதுகலை ஆசிரியர் தேர்வு உட்பட,பல வகையான தேர்வுகளை,வெற்றிகரமாக நடத்தினார். டி.ஆர்.பி.,புதிய தலைவராக,ஐ.ஏ.எஸ்.,அதிகாரி விபு நய்யார்,நேற்று முன்தினம்,பதவி ஏற்றுக் கொண்டார். வரும்,17,18ம் தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி.,தேர்வு,புதிய தலைவர் மேற்பார்வையில் நடக்க உள்ளது
விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ். அரசு உதவி பெறும் கல்லூரிகளில், காலியாக உள்ள, 3,000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் கல்வித் துறைக்கும், நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது . மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர், சுப்புராஜ், தாக்கல் செய்த மனு: கடந்த, 2011, மே மாதம், சட்டசபையில், உயர் கல்வி அமைச்சர்,"அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,120 காலியிடங்கள் உள்ளன; இவற்றை விரைந்து நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்" என, அறிவித்தார். ஓராண்டுக்குப் பின், காலியிடங்கள் குறித்து, உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. கல்வித் துறையின் திட்டப்படி, தேர்வு நடவடிக்கைகளை துவக்குவதற்குப் பதில், ஒரு குழுவை, கல்லூரி கல்விஇயக்குனரகம் அமைத்தது.காலியிடங்களை நிரப்ப, கல்லூரி நிர்வாகத்தையும் அனுமதிக்கவில்லை.அவ்வப்போது ஓய்வு பெறுபவர்களும் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.  இந்த கல்வியாண்டும் துவங்கி விட்டதால...