3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது. 100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள்உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில்வெளியிடப்படும். குரூப்–2 தேர்வு நகராட்சி கமிஷனர் (கிரேடு–2) தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி,உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர், ஊராட்சி உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது.ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குருப்–2 தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பு 30 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் விதவைகளுக்கும் (பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட) எவ்வித வயது வரம்பும் கிடையாது. கு...
Posts
Showing posts from August 3, 2013