Posts

Showing posts from July 29, 2013
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் மாற்றம் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநாயர் நியமனம் தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் மாற்றப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:– பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் வகுப்பினர், சிறுபான்மையின நலத்துறை துணை செயலாளர் எஸ்.சிவசண்முகராஜா மாற்றப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைஇயக்குனராக நியமிக்கப்பட்டார். பாசன விவசாயம் நவீனமாக்குதல் மற்றும் நீர்வள மேலாண்மை திட்ட இயக்குனர் விபு நாயர் மாற்றப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பணிபுரிந்த சுர்ஜித் கே.சவுத்ரி மத்திய அரசுபணிக்கு செல்கிறார்.விவசாயத்துறை சிறப்பு செயலாளர் அசோக் ரஞ்சன் மொகந்தி மாற்றப்பட்டு, மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சி.விஜயராஜ் குமார் மாற்றப்பட்டு தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால்வாரிய மேலாண் இயக்குனராக பணியாற்றிய பி.ஏகாம்பரம் பணி ஓய்வு பெற்றார்.இதற்கான உத்தரவை அரசு தலைமைச்செயலாளர் ஷீ...
முதுகலை ஆசிரியர் தேர்வு கீ ஆன்சர்: இணையதளத்தில் வெளியீடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு-1) பணி இடங்களை கடந்த 21-ந்தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்த தேர்வை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் விடைத்தால் நகலும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், தேர்வுக்கான கீ ஆன்சர் ஐ ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வினா வகை (ஏ, பி, சி, டி) வாரியாக தெரிந்து கொள்ளலாம். தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் விடைத்தாள் நகலை பார்த்து தங்கள் மதிப்பெண்ணை துல்லியமாக அறிய முடியும். தேர்வு முடிவை ஒரு மாதத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.
TRB RELEASED ...........Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 Tentative Answer Key